அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும்
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் அதனைச் சமாளிப்பதற்கு அனைவரின் உதவியும் அவசியம் எனத் தெரிவித்த அமைச்சர், விவசாயத்தில் அனைத்து அரச அதிகாரிகளையும் ஈடுபடுத்தி பொதுமக்களை ஊக்கப்படுத்துவது காலத்துக்கு உரியது எனவும் சுட்டிக்காட்டினார்.
இளைஞர் சமூகத்திற்கு பொறுப்பான அமைச்சு, விவசாய நடவடிக்கைகளுக்கு நேரடியாக பங்களிப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 5 மில்லியன் இளைஞர்களை இலக்கு வைத்து இதனை நடத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) 1.7 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியும் என்று அமைச்சர் கூறினார்.
“அவர்களின் வீடுகளுக்கு அருகாமையில் அவர்களின் சொந்த நுகர்வுக்காக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதும் சொந்தமாக பயிரிட்டு தமது உணவுத் தேவையை நிவர்த்தி செய்வதற்குமான நேரமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.