ஜோஸப் ஸ்டாலினுக்கு பிணை வழங்குவது தொடர்பாக புதிய தீர்மானம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கான பிணை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட திரு ஜோசப் ஸ்டாலின் நேற்று (04) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திரு.ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மனுவொன்றை சமர்ப்பித்து தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை இன்று (05) அறிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!