அரச சேவையில் பாரம்பரியத்திற்கு அப்பால் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்

அரச சேவையை ‘இ-சேவையாக’ மாற்ற வேண்டிய தேவை உள்ளது என அரச நிர்வாக அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

பாரம்பரியத்துக்கு அப்பாற்பட்டுச் சிந்தித்து, காகிதப் பயன்பாட்டைக் குறைக்க இ-தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார்.

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிப்பதற்கும் மாற்றுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதற்கும், சீருடை அத்தியாவசியமில்லாத போது வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்க பொது நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் திரு.மாயாதுன்ன தெரிவித்தார்.

நாட்டுக்காக டாலர்களை சேமிக்கும் வகையில், நாட்டுக்காக ஒரு டாலரை சேமியுங்கள் என்ற தொனிப்பொருளில் நாட்டு மக்களிடையே நேர் மனப்பான்மையை வளர்க்கவும் அரசு அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்தவும் வேண்டும் என்றார்.

எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால், ஒவ்வொரு வீட்டுத்தோட்டம், பொது நிலம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணிகளில் பயிர்ச் செய்கை செய்வதற்கு அரசாங்க அதிபர்கள் ஊடாக வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் எனத் தெரிவித்த செயலாளர். பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து பயனுள்ள சேவையைப் பெற எதிர்காலத்தில் தேவையான திட்டம் டைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!