இந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மூன்று மாதங்கள் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் சுற்றறிககை இன்று மாலை வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாதம் 17ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன் நடைமுறை தொடர்பாக ஏனைய அமைச்சுக்கள் திணைக்களங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.