கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான நியனக் கடிதங்கள் விரைவில் தபாலிடப்படும்

தேசிய கல்வியியல் கல்லூரி 2017-2019 டிப்ளோமாதாரிகளுக்கான நியனமங்களை வழங்குவதற்கான முயற்சிகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

இந்நியமனங்கள் 04.05.2022 ஆம் திகதி முதல் அமுல் அமுலாகும் வகையில் வழங்கப்படவுள்ளதோடு, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1 ஆ தரத்திற்கு நியனமனங்கள் வழங்கப்படவுள்ளன.

தேசி யபாடசாலைகளில் நியமனம் பெறவுள்ளவர்களின் பெயர் பட்டியல் குறிப்பிட்ட நியமனப் பாடசாலைகளின் விபரங்களோடும் மாகாணப் பாடசாலைகளில் நியனம் பெறவுள்ளவர்களுக்கான நியனங்கள் மாகாணத்தின் விபரங்களோடும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பிரசுரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய பாடசாலைகளில் நியமனம் பெறவுள்ளவர்கள் பாடசாலை அதிபரின் ஊடாக நியனமக் கடிதங்களைப் பெறும் வகையிலும்் மாகாணப் பாடசாலைகளில் நியனங்களைப் பெறவுள்ளவர்களுக்கான நியமனங்கள் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாகவும் அடுத்த வாரம்வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான அழைப்புக்கடிதங்கள் விரைவில் தபாலிடப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!