அரச செலவுகளைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியீடு
அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.
திட்டச் செலவினக் கட்டுப்பாட்டு, எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள் மற்றும் அரசாங்கத் துறை ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்தல் முதலானவை இந்த சுற்றிக்கை ஊடாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுச் செலவினங்கள் மிகவும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதால், உள்ளூர் நிதியில் நிதியளிக்கப்படும் திட்டங்களைச் செலவு மற்றும் செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கோடிட்டு நிதி அமைச்சின் செயலாளர் குறித்த சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார்.
குறித்த சுற்றறிக்கை கீழே…