கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சில் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

  1. ஆசிரியர்களுக்கான மொடியுல் முறையில் மாற்றம் கொண்டுவரல். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிக்கக் கூடியவாறு எளிய முறையில் அமுல்படுத்தல்
  2. இரண்டாம் மொழித் தேர்ச்சிக்காக கட்டணம் அறவிடாது கடமை விடுமுறையுடன் பாடநெறியைத் தொடர்வதற்கு தேவையான தலையீட்டை மேற்கொள்ள கல்வி அமைச்சர் உடன்பட்டதோடு, மொடியில் திருத்தத்தின் போது இரண்டாம் மொழித் தேர்ச்சியையும் மொடியுலாக மாற்றுவதற்கும். கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்களின் பயிற்சியில் இரண்டாம் மொழித் தேர்ச்சியையும் உள்ளடக்குமாறு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்ததோடு, பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. தேசிய பாடசாலைகளில் கற்பிற்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளை ஏனைய தேசிய பாடசாலைகளில் சேர்க்கும் வகையில் மாற்றம் கொண்டுவரல்
  4. தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமா பாடநெறியை 2023 ஆம் ஆண்டு முதல் பட்டப்பாடநெறிகளாக தரமுயர்த்துவதாக கல்வி அமைச்சு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  5. எரிபொருள் பிரச்சினைகளை தீர்த்தல்
  6. பாடத்துடன் தொடர்புடைய பட்டப்பின் கற்கைகளை மேற்கொள்பவர்களுக்கும் பதவியுயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பின் போது கவனத்திற் கொள்ளல்
  7. ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலை இலகுபடுத்துவதற்காக கட்டம் கட்டமாக டெப் வழங்கல். இலகு தவணை அடிப்படையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இணக்கம் காணப்பட்டது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!