புதிய தொழில் வழிகாட்டல் முன்மொழிவுகளுக்கு ஏற்ப பாடசாலை தொழில் வழிகாட்டல் கழகங்களை நிறுவுவதற்கான முதலாவது வேலைத்திட்டம் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பிரிவின் பணிப்பாளர் திரு.சந்தன விதானபத்திரன தலைமையில் அண்மையில் அரவல தர்மபால மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இது இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்திருந்தது.
இங்கு, க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்கான சிறப்பான தொழில் வழிகாட்டல் முறையாக கருதப்படும் தொழில் தெரிவு மதிப்பீடுகளை நடைமுறையில் திட்டமிடுவது என்பது குறித்த தொழில்முறை வழிகாட்டலும் வழங்கப்பட்டது. இதில் சுமார் 150 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.