மே 23 முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
நெருக்கடியான சூழல் காரணமாக நடத்த முடியாமல் போன 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வியைத் தொடர கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் ஒக்டோபர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சையும் நடத்தப்பட உள்ளது.
கல்வி அமைச்சினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு தேவையான அனைத்து தாள்களும் போதுமானதாக நாட்டில் உள்ளது. நாட்டில் எத்தகைய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் பரீட்சைகளை பிற்போடுவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.