சாதாரண தரப் பரீட்சை: பரீட்சைத் திணைக்கள அறிவித்தல்கள்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

  • 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மொத்தம் 517,496 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.

  • பரீட்சை மே 23, 2022 முதல் ஜூன் 1, 2022 வரை நடைபெறும்
  • 407,129 பாடசாலை மாணவர்களும் 110,367 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
  • மொத்தம் 3844 பரீட்சை மையங்களும், 542 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  • பாடசாலை மாணவர்கள் தங்கள் தொடர்புடைய பாடசாலைகளில் தங்கள் சுட்டெண்களைப் பெறலாம்.
  • இதுவரை தங்களின் சுட்டெண்களைப் எண்களைப் பெறாத தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பரீட்சையில் பங்கேற்க தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் சுட்டெண் கட்டாயம்.
  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புகள் 20 மே 2022 நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட உள்ளன.
  • கோவிட் விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் கோவிட் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுத தனி அறைகள் வழங்கப்படும்.
  • குறிப்பாக எரிபொருள் நெருக்கடியின் போது மாணவர்களின் போக்குவரத்துக்காக மேலதிக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும்.
Teachmore

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!