தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்தோருக்கான பாடசாலை வழங்கல் – அதிபர்களுக்கான அறிவித்தல்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை தரம் 6 இற்கு சேர்த்துக் கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு அதிபர்களை தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, தரம் 6 இற்கு குறித்த பாடசாலைகளுக்கு அனுமதி பெறத் தகைமை பெற்றுள்ளவர்கள் தொடர்பாக பின்வரும் இணையத்தள இணைப்பில் பரீட்சித்துப் பார்க்குமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
அனுமதித்தல் தொடர்பாக குறித்த மாணவரின் பெற்றாருக்கு அறிவிப்பதோடு விரையில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியுள்ளது. ஒரே புள்ளிகள் பெற்றவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் போது 45 மாணவர்களின் எண்ணிக்கைக்கு அதிமானாலும் கூட அவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்த பின்னர் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பான ஆவணத்தில் வருமானம் நிரலில் ஆம் அல்லது ஆம் விசேட தேவை என குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரம் புலமைப் பரிசில் நிதி கிடைக்கும். அவர்களது பெற்றார் ஊடாக வங்கிக்கணக்கு திறந்து அதன் பிரதியை உறுதி செய்து ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை வங்கியில் கணக்கைத் திறப்பது நிர்வாக விடயங்களுக்கு இலகுவானது.
ஆரம்பப் பரிவு இல்லாத தரம் 6 இல் ஆரம்பமாகும் மற்றும் ஊட்டப்பாடசாலைகள் இல்லாத பாடசாலைகளுக்கு 3-2018 சுற்றுநிருபத்தின் படி வழங்கப்பட்டுள்ள 15 வீத (பழைய மாணவர்கள், சகோதரர்கள், கல்வி ஊழியர்கள்) 2022 ஆண்டில் தரம் 6 கற்கும் மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்தற்கும் பொருந்தும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ளீர்க்கப்படவேண்டியர்கள் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் உள்ளீர்ப்புச் செய்ய வேண்டும்.
கல்வி அமைச்சின் கடிதத்தை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம். – சிங்களப் பிரதி