தேசிய கல்விக் கொள்கை (வரைபு) தயார்: கல்வியித்துறையில் மாற்றங்கள்

கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்திற்கு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் முன்னுரிமை மற்றும் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் இன்று (27) காலை கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கும் பாரிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும் என தேசிய கல்வி ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

க.பொ.த O/L, எதிர்வரும் க.பொ.த சாதாரண தரம் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மற்றும் பாடத்திட்டத்தின் வரம்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதில் பல துறைகளில் கிடைத்த உதவிகளை பாராட்டினர்.

தற்போதுள்ள தடைகளுக்கு மத்தியிலும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பலர் செயற்பட்ட விதம் சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளை நேரத்தை வீணடிக்காமல் எதிர்காலத்திற்கான பாதையை காட்டும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தம் என்பது புத்தகத்தின் உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்கும் முறைமைக்கு மட்டுப்படுத்தப்படாமல் திறன் மற்றும் திறமைகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்தை வழங்குவதற்குத் தயார் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட பாடப்பிரிவு எதுவாக இருந்தாலும் அனைத்து மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை கற்கக்கூடிய வகையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாடசாலை அபிவிருத்தி, சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!