2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சின் nemis thrm தரவுத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வு அமைச்சு அறிவித்துள்ளது.
2022.04.17 ஆந் திகதி மு.ப 12.00 மணி தொடக்கம் 2022.04.30 ஆந் திகதி மு.ப. 12.00 மணி வரை தரவுத் தளம் திறந்திருக்கும்.
- சகல ஆசிரியர்களும் Online மூலம் இந்த இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
- பத்து வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களின் இடமாற்றம் கவனத்தில் கொள்ளப்படும். இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் கட்டாய இடமாற்றத்திற்குட்பட்டு இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்.
- வைத்திய காரணங்கள் ஏதுமிருப்பின் இடமாற்றம் கோருமிடத்தில் கவனம் செலுத்தப்படும்.
- தங்களது சேவைக்காலத்தினை 2021.12.31 ஆந் திகதிக்கு கணக்கிடவும்
