தேசிய பாடசாலைகளின் நியனமத்துக்கான கடிதங்கள் தபாலிடப்பட்டுள்ளன
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2017-2019 குழுவினரில் தேசிய பாடசாலைகளில் நியமனம் பெறவுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
தற்போதைய நிலமைகளின் கீழ் பெரும்பாலானவர்களுக்கு கடிதங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் காணப்படும் என்பதனால் தாம் விண்ணப்பித்த தேசிய பாடசாலைகளின் அதிபர்களைத் தொடர்பு கொள்ளுவதன் மூலம் தமது நியமனக் கடிதத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது.