கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா விக்கிரமராட்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஆர்.விக்ரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (ஜூன் 07) கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!