பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவர்- கல்வி அமைச்சர்
பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு நியமனம் வழங்கப்படும் என்றார்.
பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.
New lecturers are being recruited for universities – Minister of Education