அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: புதிய முன்மொழிவு திங்கன்று
பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்காக அரச சேவை ஊழியர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துவதற்கான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதை கட்டுப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்கள் அரசாங்க செலவினங்களைக் குறைத்தல், அரச உத்தியோகத்தர்கள் நாளாந்தம் கடமைக்கு சமூகமளிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கடமைக்கு வருதல், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகிய மூன்று விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மூன்று தரப்பினரையும் மையப்படுத்தி உரிய தீர்மானத்தை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரிப்பதில் அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.