பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமனம்


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


அவர் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Teachmore
G.H.Peries


1960 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியலில் முதல் தரப் பட்டம் பெற்ற திரு. பீரிஸ் 1965 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியலில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
இவர் முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு 44 வருடங்களாக பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.


பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் மாற்றம் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!