வட மாகாணத்தில் பாடசாலைகள் நாளை இயங்கும்
நாளை (20) வெள்ளிக்கிழமை வடமாகாண பாடசாலைகள் அனைத்தும் வழமைபோல் இடம்பெறும் என வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
அத்தியவசியமற்ற அரச ஊழியர்கள் கடமைக்கு வர வேண்டாம் என பிரமதமர் அறிவித்திருந்தார். பாடசாலைகள் அத்தியவசிய சேவை இல்லை என்ற பின்னணியில் வடமாகாணத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளையுடன் தவணைக்கான விடுமுறை வழங்கப்படுகிறது. இதில் அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் விடுமுறை காலத்தில் மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகளை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்