எமக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

நீதித்துறை மற்றும் நீதி ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்

நீதித்துறை சேவைகள் வெள்ளிக்கிழமைகளில் நிறுத்தப்படும் பட்சத்தில் பொது மக்களும் சட்ட வல்லுநர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!