மே 22 முதல் ஜூன் 1 வரை மின்சாரத் தடையின்றி வழங்க பணிப்பு
சாதாரண தரப் பரீட்சைக் காலப் பகுதியில் மின்சாரத்தை தடை இன்றி வழங்குமாறு மின்சார சபைக்கு, பொதுமக்கள் நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் நீர் வசதிகளை வழங்குமாறு தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 6.30 இலிருந்து ஜூன் 1 வரை மின்தடை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டப்பட்டுள்ளது.