அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு இல்லை – நிதி அமைச்சு
அரச ஊழியர்களின் சம்பள் குறைப்பு ஏற்படாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் செலவினங்களைக் குறைக்கவே நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை (26) வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.