வட மாகாணத்தில் 355 பேரை நியமிக்க நடவடிக்கை: ஏனைேயார் வெளிமாகாணங்களுக்கு.

கல்வியியல் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களில் 355 பேர் வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலைகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர்களாக பாடசாலைகளிற்கு நியமனம் பெறும் சமயம் கடந்த ஆண்டுகளில் எமது மாகாணத்திற்கு 250 முதல் 300 வரையான ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். இதனால் நாம் முற்கூட்டியே இந்த ஆண்டு வன்னிப் பாடசாலைகளின் தேவை கருதி அதிக ஆசிரியர்களை எண்ணிக்கை வாரியாக கோரியிருந்தோம்.

இதன் பயணாக 18 பாடங்களிற்கான 355 ஆசிரியர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு நியமிக்கப்பட்டு அவர்களின் பெயர் விபரங்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் இந்த 355 ஆசிரியர்களிற்கும் மேலதிகமாக வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளிற்கும் சில நூறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

எனினும் வடமாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்களுக்கு வடமாகாணத்தில் நியமனம் வழங்கமுடியாது என்றும் வேறு மாகாணங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் வடமாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

ஒவ்வொரு மாகாணத்திலும் காணப்பட்ட வெற்றிடங்களின் அடிப்படையிலேயே கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!