தேசிய பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதம் இடைநிறுத்தம்

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை வழங்குவது இன்று (20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்று கல்வி அமைச்சில் பதவியேற்றதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அது தொடர்பில் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு மேலும் விபரமாக தெரிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!