அரச பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற கல்வி சார் ஊழியர்களுக்கு தொழில் சார்ந்த அடையாள அட்டை வழங்குதல்

சுற்றுநிருபம் 21/2021

அரச பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற கல்வி சார் ஊழியர்களுக்கு தொழில் சார்ந்த அடையாள அட்டை வழங்குதல்

கல்விக்காக பெறுமதிமிக்க சேவையினை வழங்குகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் தொழில் ரீதியான தனித்துவத்தினைப் பாதுகாக்கும் நோக்கில் அரச பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் பரீட்சார்த்த நடவடிக்கையாக 2021 ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் விதத்தில் குறிப்பிட்ட சில தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
அதன் அடுத்த கட்டமாக நாட்டில் காணப்படுகின்ற அனைத்து தேசிய பாடசாலைகளினது அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்குமான உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதற்காக கீழ்க் குறிப்பிடப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படும்
01. தொழில் சார்ந்த அடையாள அட்டை தொடர்பில் அடையாள அட்டை பெறுகின்றவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்.
 
 • இந்த அடையாள அட்டை தொழில் சார்ந்த விடயங்களுக்காக மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.
 • இந்த ஆளடையாள அட்டைய கல்வி அமைச்சின் சொத்தாகும். இதனை வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கு இடமளிப்பது தாபன விதிக் கோவையின் பிரகாரம் குற்றமாகும்.
 • நீங்கள் தற்போது வகிக்கின்ற சேவையிலிருந்து அல்லது பதவியிலிருந்து அல்லது நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும் போது / இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது / நிரந்தரமாக வௌிநாட்டுக்குச் செல்லும் போது / சேவையிலிருந்து விலகும் போது இந்த அடையாள அட்டையை நிறுவனத்தில் ஒப்படைப்பதற்கு கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் குறித்த சேவையிலிருந்து / பதவியிலிருந்து/ நிறுவனத்திலிருந்து மாற்றம் பெறும்போது புதிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
 • வழங்கப்படுகின்ற அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் குறித்த அதிபர்/ ஆசிரியர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
 • ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த அடையாள அட்டை காணாமல் போதல் அல்லது பழுதடைந்துவிடுதல் அல்லது அழிந்து போதல் முதலானவற்றின் போது அது குறித்து உடனடியாக அதிபருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கவேண்டும். அந்த கடிதத்தின் பிரதியுடன் அதிபர் உடனடியாக வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அறிவிக்கவேண்டும். இவ்வாறு அடையாள அட்டை காணாமல் போதல் தொடர்பில் அதிபர் மூலமாக லொக் புத்தகத்தில் குறிப்பு எழுதி குறித்த ஆவணங்களை கோவை செய்து பேண வேண்டும்.
02. உத்தியோகபூர்வ அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் முறை
அடையாள அட்டைக்காக தகவல் வழங்குதல் புகைப்படம் வழங்குதல் தொடர்பில் கீழ் வரும் விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.
 • குறித்த சுற்றுநிருபத்தில் இணைப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விடயங்களை அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கின்ற அதிபர்கள், பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் ஆகியோர் தாங்களாகவே பூர்த்தி செய்து குறித்த அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும். அதிபரின் விண்ணபம் தொடர்பிலான தகவல்களை வலயக் கல்விப் பணிப்பாளர் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களது பாடசாலை ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் அடங்கியுள்ள தகவல்களை உறுதிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ முத்திரையை பதித்து கையொப்பமிட்டு குறித்த விண்ணப்பங்களை பாதுகாப்பாக கோவைப்படுத்த வேண்டும். அதிபர்கள் தங்களுக்கான அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் வலயக் கல்விக் காரியலயத்தில் ஒப்படைக்கவேண்டும் என்பதுடன் குறித்த விண்ணப்பங்கள் வலயக் கல்விப் பணிபாளரின் உறுதிப்படுத்தலுடன் கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் அத்துடன் குறித்த விண்ணப்பங்களின் பிரதிகள் வலயக் கல்விக் காரியாலயத்தில் பாதுகாப்பாக கோவை செய்யப்படவேண்டும்.
 • அடையாள அட்டை தொடர்பான தகவல்களை கூகில் படிவம் ஊடாக மாத்திரமே கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும். குறித்த கூகிள் படிவத்தை moensbranch21@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தரவிறக்கம் செய்து குறித்த தகவல்களை விண்ணப்பிக்கும் ஆசிரியர் அல்லது அதிபர் அல்லது அதிபரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவர் பூரணப்படுத்தி தகவல்களை அதே மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும். குறித்த கூகில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது தகவலின் உண்மைத் தன்மையான தொடர்பான இறுதிப் பொறுப்பினை அதிபரே ஏற்கவேண்டும். குறித்த கூகிள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவது தொடர்பான தகவல்கள் பாடசாலை கோவையில் பேணப்படவேண்டும்.
 • அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் போது குறித்த பாடசாலையைில் சம்பள ஏட்டில் இருந்து சம்பளம் பெறுகின்ற அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாத்திரமே பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், வேறு பாடசாலை அல்லது நிறுவனங்களிலிருந்து குறித்த பாடசாலைக்கு இணைப்புச் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள் இருப்பின் அவர்கள் தங்களது விண்ணப்பங்களை தான் சம்பளம் பெறுகின்ற சொந்த பாடசாலை அல்லது நிறுவனத்தின் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்.
 • புகைப்படம்.
  • அளவு – கடவுச் சீட்டு அளவு உடலின் மேல் பகுதி
  • பின்னணி நிறம் – இள நீலம்
  • உடை – ஆண்கள் கழுத்துப் பட்டியுடன் மேல்ச்சட்டை , பெண்கள் சாரி
  • முகம் – நெற்றி பூரணமாகவும் இரண்டு காதுகளும் தெரிகின்ற அடிப்படையில்
  • ஒரு புகைப்படத்தை விண்ணப்பத்துடன் கழறாத வித்தத்தில் ஒட்ட வேண்டும் என்பதுன் மற்றுமொரு புகைப்படம் (JPEG) வடிவில் கூகல் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
 • கைபொப்பமிடல்: கடும் நீல நிற பேனாவினால் குறித்த கட்டத்தின் ஓரங்கயில் படாத அடிப்படையில் கையொப்பமிட்டு Google படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
அடையாள அட்டை வழங்கப்படுவது காலத்தின் தேவையாகக்  காணப்படுவதானால் இந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறு வேண்டப்படுகிறது
இதன் அடுத்த கட்டமாக மாகாணப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் செயற்பாடு குறித்த மாகாண அமைச்சின் செயலாளர்களினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் செயலாளர்
Teachmore
Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!