Official Languages Proficiency Oral Examination-2022

Official Languages Proficiency Oral Examination-2022 பரீட்சைக்கு விண்ணப்பித்தும் பெயர் பட்டியலில் பெயர் இல்லை என பலரும் தொடர்பு கொள்கிறீர்கள்.

இது தொடர்பான விபரம் அரச கரும மொழிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பில் காணப்படுகிறது.

அதிலிருந்து பெறப்பட்ட பகுதியை கீழே காணலம். எனவே, உங்களது பெயர் விபரங்கள் வரும் வரைக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

15,000 விண்ணப்பங்கள் இப் பரீட்சைக்காக கிடைக்கப்பெற்றுள்ளமையினால் அனுமதி அட்டைகள் கட்டம் கட்டமாகவே அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் பரீட்சை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதோடு, அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அந்தந்த தினங்களுக்கான பட்டியல் இவ் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

அனுமதி அட்டை கிடைப்பதில் ஏதேனும் தாமதங்கள் ஏற்படின், இணையத்தளத்தில் காட்டப்பட்டுள்ள தினத்தில், குறித்த நேரத்திற்கு இங்கு தரப்பட்டுள்ள அனுமதி அட்டையைப் பூர்த்தி செய்து கையொப்பத்தை உறுதிப்படுத்தி பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

தாங்கள் இப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்பட்டதனை இணையத்தளத்தில் வெளியிடப்படாமல் இருப்பின், அது குறித்த விசாரணைகளை 2022 யூன் மாதத்தின் முதல் வாரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளும்படி அறியத் தருகிறேன்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!