பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இணக்கம்
பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் அதிபர்களின் இணைந்த கொடுப்பனவை அதிகரிக்க பரீட்சைத் திணைக்கள் இணக்கம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அதே நேரம், இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆணையாளர் நாயகத்துடன் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தது. எரிபொருள் விலையேற்றம் ஏனைய நெருக்கடி நிலைமைகள் காரணமாக பரீட்சை கடமைகளில் ஈடுபடுகின்ற அதிபர் ஆசிரியர்களின் ஒன்றிணைந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கு பரீட்சை தினணக்களத்தை வலியுறுத்தியதாக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இக்கொடுப்பனவை அதிகரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதுடன் அதேபோன்று இதுவரையில் செலுத்தப்படாத ஏனைய பரீட்சை கொடுப்பனவு சம்மந்தமாக பரீட்சை ஆனணயாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதற்கான கொடுப்பணவுகள் வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.