கடமைக்கு வரமுடியாத ஆசிரியர்கள் கவலையடையத் தேவையில்லை

நடாத்த முடியாத பாடசாலைகளின் ஆசிரியர்கள் கடமைக்கு சமூகளிக்கத் தேவையில்லை என்பதோடு நடாத்த முடியும் என அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகளிப்பது தன்னார்வமானது என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வர முடியாத ஆசியர்கள் அதிபர்களுடன் கலந்துரையாடி தேவையான மாற்று வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியும் என்றும் கவலை அடையத்தேவையில்ல , அவ்வாறான நிலமையில் பாடசாலைக்கு வருவது கட்டாயப்படுத்தப்பட்டதல்ல என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது பரீட்சை மதிப்பீட்டு செயற்பாடு, பாடசாலைகளை நடாத்துதல் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மாணவர்களின் பாடசாலை தினங்கள் மற்றும் பாடவிதானத்தை குறைப்பதற்கு நாம் விரும்பவில்லை என்று தெரிவித்த கல்வி அமைச்சர், இது அமைச்சினதோ அல்லது அதிகாரிகளினதோ ஆசிரியர்களினதோ மாணவர்களினதோ விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.

சேகரிக்கப்பட்ட தகல்வகளின் அடிப்படையில் பார்த்தால், கடந்த வௌ்ளிக்கிழமை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டாலும், கிராமப்புற பாடசாலைகள் நடைபெற்றுள்ளன என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு தெரிவிக்கப்பட்ட ஏனைய கருத்துக்கள் சுருக்கமாக

  • நகர்ப்புற பாடசாலைகள் விசேட நேர அட்டவணை மூலம் நிகழ்நிலையில் கற்பிக்க நகர்ப்புற பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தயாராகவுள்ளனர். மாணவர்களுக்காக சுயமாக மேற்படி பணியினை மேற்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை அறிவித்துள்ளார்கள்.
  • கிராமப்புறங்களில் உள்ள  போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாத பாடசாலைகள் வலயக்கல்வி அலுவலகத்துக்கு அறிவித்து நடாத்தலாம்.
  • போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் லீவு தொடர்பில் கவலை அடையத் தேவையில்லை. மேற்படி பணியானது தன்னார்வ அடிப்படையில் ஆசிரியர்கள் சுயமாக கடமைக்கு வருவதால் லீவு பிரச்சினைகள் ஏற்படாது.போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் லீவு தொடர்பில் கவலை அடையத் தேவையில்லை. மேற்படி பணியானது தன்னார்வ அடிப்படையில் ஆசிரியர்கள் சுயமாக கடமைக்கு வருவதால் லீவு பிரச்சினைகள் ஏற்படாது.
  • எதிர்வரும் காலங்கள் அத்தியாவசிய கற்றலுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.
  • நெனச கல்வி  தொலைக்காட்சி  மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் யூடியுப் மற்றும் ஈ தக்சலாவ கற்றல் முகாமைத்துவ தொகுதி என்பன இக்காலப்பகுதியில் கற்றலுக்கு பயன்படுத்த முடியும்.
  • ஆகஸ்ட் தவணை விடுமுறை தினங்கள் குறைக்கப்படலாம்.
  • ஜூலை மாதத்தில் உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகள் தேசிய ரீதியில் நடைபெறும்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!