ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வு – கலந்துரையாடல் இணக்கப்பாடுகள்

ஊரடங்கு நாட்களில் பாடசாலைகளுக்கு வருகை தராத ஆசிரியர்களுக்கு கடமை விடுமுறை வழங்கல், பரீட்சைக் கடமைகளுக்கு செல்லவுள்ள ஆசிரியர்களுக்கும் அத்தியவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கல், சம்பள அதிகரிப்புக்கான வருடாந்த செயலாற்றுகைப் படிவத்தை நன்கில் ஒன்றாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தென்மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர் தொழில்சங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்விச் செயலாளருடன் இலங்கை அரச ஆசிரியர் சங்கம் மே 18 ஆம் திகதி நடாத்திய கலந்துரையாடலில்
பின்வரும் விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது.

  1. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பாடசாலைக்குச் செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு, அன்றைய தினம் கடமை விடுமுறை வழங்குமாறு அதிபர்கள் மற்றும் வலயப் பணிப்பாளர்களுக்கு (A / 26/02/20 கடிதம் மூலம்) தெரிவிக்க வேண்டும்.
  2. எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் பரீட்சை கடமைகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான விசேட தேவையாக எரிபொருள் விநியோக திட்டத்தை தயாரித்தல்.
  3. தற்போதைய சம்பள அதிகரிப்பு கோரும் செயலாற்றுகைப் படிவத்தை விட மிகவும் எளிமையான வடிவத்தில் (தற்போதைய மாதிரியை விட சுமார் 1/4 எளிமையானது) வழங்குவதல் மற்றும் சுமார் மூன்று வாரங்களுக்குள் இதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்படுதல்
  4. வலய அலுவலகங்களில் ஆசிரியர்களின் தனிப்பட்ட கோப்புகள் மற்றும் இதர தேவைகளுக்காக வலய அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கான முறையான ஏற்பாடு இல்லை. எனவே,
    ஒவ்வொரு வலய அலுவலகத்திலிருந்தும் ஆசிரியர் ஆவணங்களை ஏற்கும் போது
    பொறுப்பதிகாரி மற்றும் திகதியுடன் ஆசிரியர்களுக்கு பற்றுச்சீட்டை வழங்குவதல்

ஆகிய உடன்பாடுகள் எட்டப்பட்டதாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!