கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இனணப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாகவும் இன்று(2022.06.24) நடைபெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டகார்கள் ஒழுக்கமற்ற மட்/ வலயக் கல்விப் பணிப்பாளரை வெளியேற்று , உதயரூபனை தாக்கிய காடயனை கைதுசெய் ,காடையனை சட்டத்தின் முன் நிறுத்து ,நீதியை நிலைநாட்டு மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளரின் அராஜகத்தை உடன் நிறுத்து போன்ற சுலோகங்கள் ஏந்திய பதாகைகளுடன் காணப்பட்டனர்.

மேலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்குமுன் தொடங்கிய இவ்வார்ப்பாட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடைபவனியாக வந்ததுடன் ஆளுநர் அலுவலகம் முன்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் குறித்த தாக்குதல் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்ட வேண்டி கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதுடன் அதன் பிரதிகள் பொதுச் சேவை ஆனணக்குழுவின் செயலாளருக்கும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!