போராட்டத்தை இடைநிறுத்த இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானம்
நாளை முதல் ஈடுபடுவதாக அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டதிருந்து தாம் விலகிக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்கங்களது ஒருங்கிணைப்பு நிலையம் அனைத்து போராட்டங்களையும் கைவிட்டு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஒத்துழைக்கும் விதத்தில் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அடுத்து அதனோடு இணைந்த இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கமும் தனது தீர்மானத்தை மாற்றிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் பரீட்சை மற்றும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
எனினும், போராட்டத்தை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களில் கூட்டாக அறிவித்ததால், ஏனைய சங்கங்களுடன் இது தொடர்பாக கலந்துரைடப்பட்டு தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.