பொதுத் தீர்மானங்கள் எடுக்க முடியாத கையாகாத அமைச்சு

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு ஒரு தீர்மானத்தை உருப்படியாக எடுக்க முடியாத நிலமையில் கல்வி அமைச்சு உள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான தீர்மானங்களை அறிவித்து பாடசாலை முறைமையை சிக்கலாக்கியுள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கல்வி அமைச்சு பொதுத் தீர்மானம் ஒன்றை எடுக்காது பல்வேறு இடம்பாடு கொண்ட தீர்மானங்களை அறிவித்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் தள்ள வேண்டாம் என்று சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கல்வி அமைச்சர் அறிவித்த தெளிவில்லாத தீர்மானத்தின் காரணமாக சில பாடசாலைகள், சில வலயங்களின், மாகாணங்களின் பணிப்பாளர்கள் அதிகாரிகள் பாடசாலைகளை நடாத்த தீர்மானித்துள்ளனர். புத்தளம் போன்ற சில வலயங்களில் ஆசிரியர்கள் கட்டாயம் பாடசாலைக்கு வர வேண்டும் என்றும் வராத போது ஆசிரியர்களின் தனிப்பட்ட விடுமுறையில் கணிப்பிடப்படும் என்று வலயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இது கல்வி அமைச்சர் வழங்கிய தெளிவில்லாத தீர்மானத்தின் விளைவாகும் என்று இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வினாப்பத்திர மதிப்பீட்டை தற்போதைய நெருக்கடியில் நடாத்த முடியாத போது பிற்போடும் ஒழுங்கையாவது மேற்கொள்ளுங்கள் என்றார்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கட்டுறுப்பயில்வு மாணவர்களுக்கு தீர்மானம் என்ன என்று கல்வி அமைச்சு அறிவிக்க மறந்துவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒன்லைன் கற்றல் இலங்கையில் சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒரு வாரத்திற்கு அதிக காலம் இந்தப் பிரச்சினை நீடித்த போதிலும் கல்வி அமைச்சு இன்னமும் மந்தகதியில் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

விரையில் உறுதியான தீர்மானத்தை அறிவியுங்கள். இல்லாத போது ஆசிரியர்கள் அதிபர்கள் என்ற வகையில் நாம் ஒரு தீர்மானத்தை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!