நாளை அத்தியவசியமற்ற அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் – பிரதமர்

அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றிய பிரதமர், அரச சேவையின் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

தற்போதைய கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!