கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை 10000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரிக்கை
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களின் மூன்றாம் வருட கட்டுறு பயிற்சியில் உள்ள 8000 மாணவர்களுக்கும் விடுதிகளில் உள்ள 4000 மாணவர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 5000 ரூபாவை 10000 ரூபாயாக அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போக்குவரத்து கட்டணம் உணவுக்கான செலவுகள் மிக சடுதியாக அதிகரித்துள்ளமையிலால் இவ்வாறான கொடுப்பனவு அதிகரிப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
19 தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 12000 கஸ்டத்திற்கு தீர்வு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கல்வி அமைச்சரிடம் வேண்டியுள்ளது.
