இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பல தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் அரச ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும்,
இம்முறை 20000 ரூபா அதிகரிக்கப்படவுள்ளதாகவும், பிரதமருக்கு நெக்கமான வட்டாரங்களை ஆதாரம் காட்டி த மோர்னிங் ஆங்கில இணையம் குறிப்பிட்டிள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 100 நாட்களுக்குள் 10,000 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது போன்று, காலப்போக்கில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட தயாரிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கப்படும் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்ஙு ஏற்ப தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோர பிரதமர் ரணில் கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது