நாளை மேல், தென் மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை
ஊரடங்குச் சட்டம் காலை 7 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்ற அறிவிப்போடு, பாடசாலைகளை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சுக்கள் அறிவித்துள்ளன.
மேல்மாகாணப் பாடசாலைகள், மற்றும் தென் மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதாக அவ் மாகாணங்களின் அதிகாரிகள் வலயங்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், வடமத்திய மாகாணத்தில் நண்பகல் 12 மணி வரை பாடசாலைகளை நடாத்துவதற்கு மாகாணக் கல்விச் செயலாளர் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்கள் இன்னமும் அறிவிக்கவில்லை.