நண்பகல் 12 மணிவரை சில மாகாணங்களில் பாடசாலை நடைபெறும்
வடக்கு, வட மத்திய ஆகிய மாகாணங்களில் பாடசாலைகள் நடைபெறும் என குறிப்பிட்ட மாகாணங்களின் கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணிக்கு நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் பி.ப 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள பின்னணியில் நேற்றரவு இத்தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு, மேல், தென், மத்திய மற்றுமல சப்ரகமுவ ஆகிய மாகாணங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்தன.
இதற்கிடையில், வடமேல் மாகாணத்தில் பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளே பெரும்பாலும் இத்தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
இது, இலங்கை கல்வி நிர்வாகத்தற்கு மிகப்பெரிய உதாணமாகும்.