மேல் மாகாண பாடசாலைகள் நடைபெறும் ஒழுங்கு
மேல் மாகாணத்தின் பாடசாலைகள் ஏப்ரல் 4-8 வரை நடைபெறும் ஒழுங்கு தொடர்பாக அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அது பின்வருமாறு:
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கீழ்கண்டவாறு நடைபெறும் என அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவும்.
1.) 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டு இறுதி தவணைப் பரீட்சை வழக்கம் போல் நடைபெறும்.
2.). தரம் 4, 5 மற்றும் 13 க்கு பாடசாலை மட்டத்தில் தவணைப் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டிருந்தால், வழக்கம் போல் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
3.) தரம் 4 முதல் தரம் 5 வரை சித்தியடையும் மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை திட்டமிட்டபடி மேற்கொள்வது.
4.) இறுதிப் தவணைப் பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்.
மற்ற தரங்களக அழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.
மாகாண கல்விப் பணிப்பாளர்
மேல் மாகாணம்