இரு மணித்தியாலங்களுக்கு முன் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களை அனுப்புங்கள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களை நாளை (23) முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னதாக மாணவர்களை அனுப்பினால் அது பயனுள்ளதாக இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறுகிறார்.

குறித்த நேரத்தின் பின்னர் வரும் மாணவர்களுக்கு பதில் நேரம் அல்லது பொருத்தமான தீர்வு வழங்குமாறு பரீட்சை மண்டபத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே நேரம் பரீட்சைக் காலங்களில் பாதைகளை மறித்து இடையூறு மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!