இலங்கை நிர்வாக சேவை சங்கம் பணி நிறுத்தம்
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை தமது கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
அலரிமாளிகையில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் உள்ளுர ஒருங்கிணைப்புக் குழுக்களை ஏற்றுக் கொள்வதில்லை எனவும், எந்தவொரு அரசியல்வாதியும் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவும் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு.
