அதிபர் தரம் 3 இலிருந்து இரண்டுக்கு பதவி உயர்வு

அதிபர் தரம் 3 இலிருந்து தரம் 2க்கு பதவி உயர்வு பெறுவதற்கு தேவையான திறன் விருத்தியை நிறைவு செய்தல்

கல்வி அமைச்சுடன் இணைந்து மாகாண கல்வித் திணைக்களங்கள் 2018 முதல் நடாத்திய திறன்விருத்தி வகுப்புகளில் 75% பங்குபற்றலைக் கொண்ட அதிபர்களுக்கு தரம் 3 இலிருந்து 2 க்கு பதவி உயர்வுக்கான தேவையை நிறைவு செய்துள்ளதாக சேவைப் பிரமாணக் குறிப்பு அடிப்படையில் கருதப்படும் என தீர்மானித்துள்ளது. இதற்கேற்ப 2016 ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட அதிபர்களுக்கான பதவியுயர்வு 2022.05.09 இலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த பயிற்சியை 75% பங்குபற்றுதலுடன் நிறைவு செய்த 2019 இல் நியமனம் சற்று அதிபர்களுக்கும் தரம் 3 இலிருந்து 2 க்கு பதவி உயர்த்துவதற்கான தேவையை நிறைவு செய்ததாக கருதப்படும்

இந்த பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யாத அதிபர்கள், கல்வி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய கல்வி நிறுவகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சி நெறியை 2022.12.31 க்கு முன்னர் நிறைவு செய்வதன் மூலம் தரம் 3 இலிருந்து தரம் 2 க்கு செல்வதற்கான தேவையை நிறைவு செய்த்தாக்க் கருதப்பட்டு பதவியுயர்வு திகதியிலிருந்து பதவியுயர்வு வழங்கப்படும்.

எம்.என்.ரணசிங்க, செயலாளர்,

கல்வி அமைச்சு

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!