சப்ரகமுவ மாகாண டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் வழங்கும் வைபவம் ரத்து

கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளில் சப்ரகமுவ மாகாணத்தில் நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களில் குறிப்பிட்ட தொகையினருக்கான நியமனம் வழங்கும் வைபவம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவும் நாளை இடம்பெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாகவும் ரத்துச் செய்யப்பட்டு்ளளதாக மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வைபவம் மாகாண ஆளுனர் தலைமையில் நாளை 28 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாணத்தில் நியமனம் பெறவுள்ள அனைவருக்குமான நியனமக் கடிதங்கள் தனிப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!