வேலை நிறுத்தம் தொடரும் – இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு
ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை தாம் உட்பட பல அமைப்புக்கள் தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகும் வரை என ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் அதன் இலக்கை எட்டும் வரை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் கூட்டணியின் தொழிற்சங்க போராட்டத் தீர்மானத்தை நாம் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளோம். இதில் கல்வித்துறை சார்ந்த பல சங்கங்கள் இணைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
எனினும், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் வேலை நிறுத்தத்தை ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிலமை சீர்குலைந்துள்ளது என்றார்.
இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் நிலமையை விளக்கினார்.
இதன் போது, பல தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தாம் தொடர்ந்தும் போராடப் போவதாக அறிவித்தனர்.
இருப்பினும், நாளைய தினம் இது தொடர்பாக ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ
https://fb.watch/cXyy_LkY1V/