பாடசாலை நேரத்தை ஒரு மணித்தயாலத்தால் அதிகரித்தல் – முடிவை மீளப் பெறுமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாது பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தான்தோன்றித் தனமான முடிவை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு கோரி கல்வி அமைச்சுக்கு 16 ஆசிரிய அதிபர் சங்கங்களின் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள கடிதத்தலேயே வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தை முடிப்பதற்கும், சவாலுக்குரிய காலப்பகுதிகளில் கூட பரீட்சைகளை நடாத்துவதற்கும் இரவு பகலாக ஆசிரியர்கள் மேலதிக கொடுப்பனவுகள் பெறாது பணியாற்றி வந்துள்ளனர். அவ்வாறே கொரோனா காலப்பகுதியில் ஆசிரியர்கள் சுயாதீனமாக தமது கற்பித்தலை மோற்கொண்டனர். அவ்வாறான பின்னணியில் யாருடனும் கலந்துரையாடாமல் பாடசாலையை ஒரு மணி நேரம் அதிகரித்துள்ளமை தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போக்குவரத்து உட்பட அதிக பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் என கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அத்தியவசிய பொருள்களுக்கான நீண்ட வரிசை, உணவுத் தட்டுப்பாடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை, போன்ற காரணங்களால் மாணவர்களுக்கு ஆகாரமின்றி காலை 7.30 முதல் 2.30 வரை கற்பிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

ஏனைய காலங்களில் கல்விச் செயற்பாடுகளுக்கு ஆசிரியர் அதிபர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, இம்முறையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவுள்ள இச்சந்தர்ப்பத்தில் தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்காது, நேர அதிகரிப்பு தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு கூட்டமைப்பாக வேண்டுகோள் விடுக்கிறோம் என கடிதததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Letter
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!