கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களத்துடனான கலந்துரையாடல்

கல்வியமைச்சர், பரீட்சை ஆணையாளர், கல்வியமைச்சின் கணக்காளர் ஆகியோருக்கும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்க ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில், இசுருபாயவில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. மாலை 1.30 முதல் இருமணிநேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில்-
👤தற்போது மேற்கொள்ளப்படவுள்ள பரீட்சை புள்ளியிடலுக்கான கட்டணத்தை 25 வீதத்தால் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤பரீட்சைப் புள்ளியிடல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு, ஒருநாளைக்கு 1200 ரூபா மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤அதேவேளை- பரீட்சைப் புள்ளியிடல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் பெறும் வகையிலான கடிதமொன்று வினாத்தாள் பொதியுடன் அனுப்பிவைக்கப்படும் என்றும்- அதனைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤பரீட்சைப் புள்ளியிடல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு அடுத்தவாரம் முற்பணம் வழங்கப்படவேண்டும் என தொழிற்சங்கங்க ஒன்றிய பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு -அதனை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
👤உயர்தரப் பரீட்சைக் கொடுப்பனவு, உயர்தர புள்ளியிடல் கொடுப்பனவு, செய்முறைப் பரீட்சைகளுக்கான கொடுப்பனவு, தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு என்பன இன்னும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என தொழிற்சங்க ஒன்றியத்தால் குற்றம்சாட்டியபோது- அக்கொடுப்பனவுக்கு 12 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இக்கொடுப்பனவை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய அதேவேளை- பல நெருக்கடிகளைச் சந்தித்து இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் கருதியே புள்ளியிடலுக்கு செல்கிறோம். பரீட்சைத் தாள் புள்ளியிடலில் பங்குகொள்பவர்களுக்கு அடுத்தவாரம் முற்பணம் வழங்குவதாக உறுதியளித்தவாறு அக்கொடுப்பனவு வழங்கப்படவில்லையாயின், தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்லவும் தயங்கமாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤தற்போது கடமைகளுக்கு செல்வதில் அதிபர் ஆசிரியர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து பேசிய போது, பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும் – தொடர்ந்தும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படமாட்டாது எனவும்- பாடசாலை நடைமுறை தொடர்பில் அடுத்தவாரம் புதிய பொறிமுறை ஒன்று அறிவிக்கப்படும் என்றும் கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!