தேசிய பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை இற்றைப்படுத்தல்
தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை இற்றைப்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை இற்றைப்படுத்துமாறும் அதன் அச்சுப் பிரதியை வைத்திருக்குமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் போது ஆசிரியர்களை 6-2021 சுற்றுநிருபத்திற்கு ஏற்ப வகைப்படுத்துமாறும் அதன் அடிப்படையில் பற்றாக்குறை அல்லது மேலதிகமானது என்பதை நிரப்புமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய நியனங்கள், இடமாற்றம் பெற்று நியமனத்தை பெறுப்பேற்றல், இடமாற்றம் பெற்றுச் செல்லுதல், ஓய்வு, கடமையில் இருந்து விலகிச் செல்லல் முதலானவை தொடர்பாகவும் இற்றைப்படுத்தலில் கருத்திற் கொள்ளுமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
