அதிபர்களை குறிக்கும் ‘மிகை ஊழியர்கள்’ என்ற பதம் மாற்றப்படல் வேண்டும்

 – சபையில் ஸ்ரீதரன் எம்.பி கோரிக்கை

அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதத்தை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டு வர வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

வாய்மூல விடைக்காக கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அவர்,

அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இது நியாயமானதா? அதிபர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். கடமை நிறைவேற்றும் அதிபர்களும் உள்ளனர். 2012 முதல் மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு ஏற்றமும் இல்லை. இறக்கமும் கிடையாது. இதனை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த்,

முன்னைய சுற்றுநிருபங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக பரீட்சை மூலம் தரம் பெறாத ஆசிரியர்கள் தான் மிகை ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் சேவையில் வெற்றிடம் வரும் போது அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தர அதிபர்கள் வராவிட்டால் நீண்டகாலம் பதில் அதிபர்களாக அவர்கள் பணியாற்றியுள்ளனர். அவ்வாறு பணியாற்றியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் விருப்பப்படி நியமனம் வழங்கப்படுகிறது என்றார்.

தினகரன்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!