உயர் தரப் பரீட்சைக் காலத்தில் பாடசாலை திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

உயர் தரப் பரீட்சைக் காலத்தில் பாடசாலை திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஊவாக மாகாண கல்வித் திணக்களம் அறிவித்துள்ளது. 
இதன்படி, 2022.02.04 – முதல்2022.03.06 வரை நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சை காலப்பகுதியில் பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் 2021.11.26 ஆம் திகதி 2021 ஆம் வருட பாடசாலை தவணையை முடிவறுத்தல் என்ற சுற்றுநிருபத்தின் ஊடாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். 
ஆரம்ப பிரிவுக்கு விடுமுறை வழங்கப்படாமையினால் ஆரம்பப் பிரிவு வழமை போன்று இயங்கும். 
உயர் தரப் பரீட்சைக்கான நிலையமாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புக்கள் நடாத்திச் செல்வது பரீட்சை செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமையுமானால், கல்வி அமைச்சின் விசேட அனுமதியைப் பெற்று, விடுமுறை வழங்குவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்தோடு இது தவணை விடுமுறை அல்லாத  விடுமுறை என்பதனால் மற்றும் ஆரம்பப் பிரிவு நடைபெறுவதாலும் பரீட்சை நிலையமாக பயன்படுத்தப்படாத பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளை செயற்படுத்த முடியும்.
பரீட்சைக் கடமைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனையவர்களை பயன்படுத்தி பாடசாலைக்கு பொருத்தமான வகையில் நேர அட்டவணை ஒன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டப்பட்டுள்ளது. 
குறிப்பாக தரம் தரம் 10,11 ஆகியவற்றுக்கு விசேட கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. 

 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!