கடந்த ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 44 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி


தம்புத்தேகம குருகம வித்தியாலயத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நேற்று(31) மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் 38 பேர் கொவிட் தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளது.


நேற்றுக் காலை துரித அன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.


தொற்றுக்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் அடங்குவதாக அநுராதபுரம் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை 46 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் முதல் தொடர்பாளர்களாக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தான, பதவிய மற்றும் தம்புத்தேகம பிரதேசங்களில் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜென் பரிசோதனைகளின் போது 44 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஆர்.எஸ்.பி ரத்நாயக்க தெரிவித்தார்.


நன்றி-மடவளநியுஸ்-

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!