கர்ப்பிணிகளும் ஒருவயதுக் குழந்தையின் தாய்மாரும் எவ்வாறு விடுமுறைக்கு விண்ணப்பிப்பது?

கர்ப்பிணிகளும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மாரும் பாடசாலைக்கு வருகை தரத் தேவையில்லை என்று கல்வி அமைச்சு 15.10.2021 அன்று வெளியிட்ட ED/09/12/06/01/05-2021sub1 இலக்கம் கொண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த விடுமுைறையைப் பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை கல்வி நிர்வாக சேவையில் மூத்த அதிகாரி பின்வருமாறு விபரிக்கிறார். 
1. பாடசாலைகளில் விடுமுறை விண்ணப்பத்திற்கு பயன்படுத்தப்படும் விண்ணப்ப படிவம் இரண்டை பூர்த்தி செய்தல்

2. கர்ப்பிணியாயின் அதற்கான வைத்திய ஆவணங்கள் – சான்றுகள், பாலூட்டும் தாய்மார் எனில், பிள்ளையின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் பிரதிகளை இணைத்தல்

3. குறித்த காரணத்தினால், விடுமுறை வழங்குமாறு கோரி, அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுதிய கடிதம். 

4. விண்ணப்பபடிம், ஆவணங்கள், கோரிக்கை கடிதம் ஆகியவற்றை அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவற்றின் ஒரு பிரதி ஆசிரியருடைய தனிப்பட்ட கோப்பில் சேர்க்கப்படும்.  
இது தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவை எனில், வலயக் கல்விப் பணிமனையில் ஆசிரியர் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 
சுற்றுநிருபம். 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!